புகழ்பெற்ற நடிகர் பியர்ஸ் பிராஸ்னன், 'ஜேம்ஸ் பாண்ட்' தொடரின் அடுத்த படத்தில், வயதான 007 கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
1995 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில், நான்கு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தவர் பியர்ஸ் பிராஸ்னன். சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய 72 வயதான பியர்ஸ் பிராஸ்னன், வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
'ஜேம்ஸ் பாண்ட்' படத்தின் தீவிர ரசிகரான டெனிஸ் வில்லென்யூவ், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கவுள்ளதாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் பியர்ஸ் பிராஸ்னனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பியர்ஸ் பிராஸ்னன், 'கோல்டன்ஐ', 'டுமாரோ நெவர் டைஸ்', 'தி வேர்ல்ட் இஸ் நாட் எனஃப்' மற்றும் 'டை அனதர் டே' ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.