போனி கபூரை வச்சி செய்யும் அஜித் ரசிகர்கள்! அப்படி என்ன செஞ்சார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:47 IST)
டைனோசர்ஸ் என்ற படத்தின் போஸ்டரை வெளியிட்ட போனி கபூரை அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

வலிமை படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கிணற்றில் போட்ட கல் போல கிடக்கிறது. எந்தவிதமான அப்டேட்டும் இல்லை என்பதால் அஜித் ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர். இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரைக் காணவில்லை என்று சொல்லி போஸ்டர் அடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர். அதுமட்டுமில்லாமல் சக நடிகர்கள் படங்களின் அப்டேட் வரும் போதெல்லாம் போனி கபூரை வச்சு செஞ்சு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது போனி கபூர் செய்த ஒரு செயலால் அவர்கள் மேலும் கடுப்பாகியுள்ளனர். அதற்குக் காரணம் டைனோசர்ஸ் என்ற படத்தின் போஸ்டரை அவர் வெளியிட்டதுதான். மாதவன் இயக்கிய இந்த படத்தின் போஸ்டரை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டதுதான் தாமதம். அஜித் ரசிகர்கள் நாங்கள் ஒரு வருடமாக அப்டேட் கேட்டுக் கொண்டு இருக்கோம். நீங்க என்ன வேற எந்த படத்து போஸ்டரெல்லாம் ரிலீஸ் பண்றீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மீம்ஸ்களும் வெளியிட்டு அவரை துவைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்