அஜித் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சனி, 12 டிசம்பர் 2020 (17:28 IST)
அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்து வரும் ஹூமா குரேஷி கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமூகவலைதளத்தில் கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் மும்பை வெயிலுக்கு இதமாக எப்படி மதுபானத்தை தயார் செய்து குடிப்பது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது சம்மந்தமாக ரசிகர்கள் அதிர்ச்சியாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்