நடிகர் அஜீத் வகித்து வந்த பதவி நிறைவு

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (10:06 IST)
அண்ணா பல்கலை கழகத்தில் நடிகர் அஜித் வகித்து வந்த பதவி நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் எம்ஐடி வளாகத்தில் நடிகர் அஜித் தலைமை ஹெலிகாப்டர் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் இருந்து வந்தார். அவரின் தலைமையில் இயங்கிய 'தக்ஷா' குழு பல்வேறு வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்றது. தற்போது நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் தக்ஷா குழுவின் 'ஏர் டாக்சி' பலத்த வரவேற்பை பெற்றது.


தற்போது அஜீத் வகித்து வந்த பதவிக்காலம் தற்போது நிறைவடைந்தது. இதற்காக அண்ணா பல்கலை. சார்பில் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அதில் அவரின் மதவிக்காலம் நிறைவடைவதாகவும், எம்ஐடி மற்றும் அண்ணா பல்கலை கழகத்தின் சார்பில் அவரின் மதிப்புமிக்க பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு  மீண்டும் அவரின் பங்களிப்பு தேவைப்பட்டால் அவரை அணுகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்