மலேசியாவின் 16 - வது மன்னர் இன்று பதவியேற்பு...

வியாழன், 31 ஜனவரி 2019 (16:08 IST)
மலேசியாவின் 16 வது மன்னராக சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமது ஷா இன்று பதவியேற்றுள்ளார்.
மலேசிய தேசத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அந்நாட்டு மன்னராக பதவியேற்ற ஐந்தாம்  மன்னர் சுல்தான் முஹம்மது, தன் பதவிக்காலம் முடிடையும் முன்பாகவே கடந்த 6 ஆம் தேதி பதவி விலகினார் என்று செய்திகள் வெளியாகின.இது பற்றி அரண்மனை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மலேசியாவில் தற்போது 9 மாநிலங்களில் அரச வம்சத்தை சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வருகின்றனர். மேலும் சுழற்சி முறையில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்வு செய்து மன்னராக முடிசூட்டப்படுவார்கள்.
 
இந்நிலையில் 5 ஆம் சுல்தான் முஹம்மது பதவி விலகியதை அடுத்து பஹாங் மாநிலத்தில் தலைவரான சுல்தான் அப்துல்லா சுதான் அஹமது ஷா (59) கடந்த 24 ஆம் தேதி மலேசிய தேசத்தின் 16 வது மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிய மன்னர் பதவியேற்கும் விழா கோலாலம்பூரில் உள்ள அரணமனையில் நடைபெற்றது. அப்போது மலேசியாவின் 16வது பிரதமராக சுல்தான் நஸ்ரின் ஷா துணை மன்னராகப் பதபியேற்றார். 
 
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மகாதீர் முகமது, அரச குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்