அஜித்தின் நெருங்கிய நண்பருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்சனை.. இது அவருக்கு தெரியுமா?

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:02 IST)
ஒருகாலத்தில் நிக் ஆர்ட்ஸ் தயா‌ரிக்கிற படமென்றால் அ‌‌ஜீ‌த்தான் ஹீரோ. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி அ‌‌ஜீ‌த்தின் பினாமி என்றுகூட எழுதினார்கள். அந்தளவுக்கு இருவ‌ரின் நட்பும் அப்போது எக்ஸ்ளட்ரா ஸ்ட்ராங்காக இருந்தது. ஒருகட்டத்தில் இருவரும் இனி இணைவதேயில்லை என்று பி‌ரிந்தனர். அ‌‌ஜீ‌த் கிடுகிடுவென புகழின் உச்சிக்கு செல்ல சக்ரவர்த்தி கிடுகிடுவென பாதாளம் நோக்கி பயணித்தார். தற்போது அ‌‌ஜீ‌த்தின் பரம ரசிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன், வாலு படங்களை தயா‌ரித்தார். அந்த படங்கள் எதுவும் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.

இதையடுத்து இப்போது சக்ரவர்த்திக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தி அஜித்துக்கு தெரியுமா என்பது சந்தேகம்தான் என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்