ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி:இந்திய வீரர் ஷெராவத் தங்கம் வென்றார்

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (10:06 IST)
கஜகஸ்தான் நாட்டின் தலை நகர் அஸ்தானாவில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஷெராவத், அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

கஜகஸ்தான் தலை நகர் அஸ்தானாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. 

நேற்று நடைபெற்ற ஆண்டுகளுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அமன் ஷெராவத், கிரிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அல்மாஸ் ஸ்மன்பெகோவுடன் மோதினார்.

இந்தப் போட்டியில், அமன் ஷெராவத் 9-4 என்ற புள்ளி கணக்கில் அல்மாஸ்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

தற்போது  நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா ஏற்கனவே வெள்ளி, வெண்கலப்பதக்கம் வென்றிருந்தாலும், இந்தியா வென்றுள்ள முதல் தங்கப்பதக்கம் இது.

ஷெராவத் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்