அஜித் 62 பட இயக்குனர் லிஸ்ட்டில் இவரும் இருக்கிறாரா? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (15:16 IST)
அஜித் 62 பட இயக்குனர் ஆக பணியாற்ற இருந்த விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்த லிஸ்ட்டில் இப்போது வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. லைகாவுக்கு சம்மந்தப்பட்ட ஆட்கள் இது சம்மந்தமாக வெங்கட்பிரபுவிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்