அஜித் 61 படத்தின் டைட்டில் எப்போது? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:31 IST)
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து விசாகப்பட்டணத்தில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்