ஜனவரி 16ஆம் தேதி ‘அஜித் 61’ படத்தின் பூஜையா?

வியாழன், 6 ஜனவரி 2022 (17:40 IST)
ஜனவரி 16ஆம் தேதி ‘அஜித் 61’ படத்தின் பூஜையா?
அஜித் நடித்த வலிமை திரைப்படம் வரும் 13ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான அஜித் 61 படத்தின் பூஜை ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஜனவரி 16 ஆம் தேதி என்பது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே இந்த படத்தின் பூஜையை மும்பையில் நடத்த திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது
 
போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் மூன்றே மாதத்தில் இந்த படத்தை முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்