எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வலிமை பொங்கலுக்கு வெளியாவதாக போனிகபூர் அறிவித்திருந்தார். தற்போது ஒமிக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி உள்ளது. நாட்டின் பிற மாநிலங்களிலும் பல்வேறு தடைகள் இருப்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளன.
இந்நிலையில் வலிமை ரிலீஸ் குறித்து போனிக்கபூருக்கு கோரிக்கை வைத்துள்ள இயக்குனர் மோகன்ஜீ “இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்படாவிட்டால் வலிமை 13ம் தேதி வெளியாவதில் சிக்கல் இல்லை. ஆனால் ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் வலிமை ரிலீஸை தயாரிப்பாளர் போனிகபூர் ஒத்திவைக்க வேண்டும். ஓடிடியில் வெளியிட வேண்டாம். இது ஒரு அஜித் ரசிகரின் கோரிக்கை” என கூறியுள்ளார்.