லைகா நிறுவனத்துக்காக படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (14:55 IST)
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் பாலிவுட் படம் ஒன்றை இயக்கபோவதாக அறிவித்துள்ளார். அந்த படத்துக்கு ஓ சாத்தி லால் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படம் இப்போது சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில் அவர் இப்போது உடனடியாக ஒரு தமிழ் படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைகா நிறுவனத்தினருடன் இது சம்மந்தமாக சந்திப்பு நடத்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்