எளிமையாக நடந்த ஐஸ்வர்யா- உமாபதி நிச்சயதார்த்தம்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (08:01 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அர்ஜுன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங்காக வலம் வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்கிறார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதியோடுதான் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவலகள் பரவி வந்தன. இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இப்போது பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று அவர்கள் இருவருக்கும் இருவீட்டார் முன்னிலையில் எளிமையாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்