'விஸ்வாசம்' படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நயன்தாராவின் சிறப்பு விருந்து

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (08:30 IST)
தல அஜித்துடன் நடிகை நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் நாள் காட்சிகளின் டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது நாள் முதல் ஐந்தாவது நாள் வரையிலான டிக்கெட்டுக்கள் வேகமாக முன்பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படம் பார்க்க திரையரங்குகளுக்கு வரும் அஜித், நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து காத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதுதான் நேற்று வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவு பெற்ற 'ஐரா' டீசர், உலகம் முழுவதும் 'விஸ்வாசம்' திரையிடப்படும் திரையரங்குகளில் 'ஐரா' டீசர் திரையிடப்படவுள்ளதாம். இந்த தகவல் இன்னும் ஓரிரு நாளில் உறுதி செய்யப்படவுள்ளது. 'ஐரா' படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'கே.ஆர்.ஜே ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று யூடியூபில் வெளியான 'ஐரா' டீசர் 12 மணி நேரத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 55 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்