அதன்படி நேற்று திமுக சார்பில் பூண்டி கலைவாணனும் மற்றும் அமமுக சார்பில் காமராஜ் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இன்று அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கஜா புயல் காரணமாக திருவாரூர் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாலும், மக்களுக்கு நிவாரண பணிகள் முழுமையாக சென்று சேராத காரணத்தாலும் இடைத்தேர்தலை ஒத்திவைக்கும் படி கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆர்கே நகரைக் காட்டிலும் திருவாரூரில் அமமுக இமாலய வெற்றி பெறும். ஆர்.கே நகரில் அதிமுக பணம் கொடுத்து வெற்று பெற பார்த்தார்கள். அது நடக்கவில்லை.
திருவாரூரில் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க நினைக்கும் கட்சிகளை ஓட வைப்போம். ஸ்ட்ராங்கான வேட்பாளரை களமிறக்கியுள்ளோம். நிச்சயம் வெற்றி காண்போம். தேர்தலை சந்திக்க பயந்து திமுக, அதிமுக நொண்டி சாக்கை சொல்லுகின்றனர். அமமுகவிற்கு எந்த பயமும் இல்லை என டிடிவி பேசினார். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கனை கொடுத்துவிட்டு பேலன்ஸ் அமவுண்ட்டை இன்னும் தினகரன் செட்டில் பண்ணாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.