அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட விமான பணிப்பெண்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:54 IST)
அஜித்துடன் புகைப்படம் எடுத்து கொண்ட விமான பணிப்பெண்!
அஜித் நடிக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று அஜித் ஐதராபாத்துக்கு விமான மூலம் சென்றார் 
 
விமானத்தில் அவரை சந்தித்த விமான பணிப்பெண் ஒருவர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அஜித் போன்று ஒரு எளிமையான நபரை நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர்தான் தமிழ் சினிமாவின் அழகான நடிகர் என்றும் கூறினார் 
 
அவருடைய எளிமை, அருமையான புன்னகை மற்றும் வசீகர தோற்றம் ஆகியவை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அஜீத் உடன் அந்த விமானத்தில் இருந்த பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பதும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்