இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.
ராஜமெளலி இயக்கியுள்ள பிரமாண்டமான படம் ‘பாகுபலி’. இதன் முதல் பாகம் 700 கோடி ரூபாயைச் சம்பாதிக்க, இரண்டாம் பாகமோ 1000 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் இந்திய சினிமாவை தலைநிமிரச் செய்திருக்கிறது இந்தப் படம்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை. இதற்காக, 50 நிறுவனங்களைச் சேர்ந்த கிராஃபிக்ஸ் கலைஞர்கள் பணியாற்றினர். ஆனாலும், பிரமாண்டமான சில செட்டுகள் நிஜமாகவே போடப்பட்டவை. அவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், பைபர், கெமிக்கல் போன்றவை மலை போலக் குவிந்திருக்கிறதாம். எத்தனை வருடங்கள் ஆனாலும் இவை மட்காது.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் மனு அளித்திருக்கிறார்கள் ஆர்வலர்கள் சிலர். ஆனால், இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த படத்தின் மீது நடவடிக்கை எடுக்காது மத்திய அரசு என்கின்றனர் சிலர். என்ன நடக்குதுனு பார்க்கலாம்…