தமிழ் புத்தாண்டில் டபுள் விருந்து.. ராகவா லாரன்ஸின் இன்னொரு பட அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (16:35 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்பதும் பென்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் அறிவிப்பு இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் பென்ஸ் படத்தை அடுத்து தற்போது ’ஹண்டர்’ என்ற இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திலும் ராகவா லாரன்ஸ் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 
 
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த படம் ராகவா லாரன்ஸின் 25 வது படம் என்ற பெருமைக்குரியது ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று ஒரே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு திரைப்படங்களின் அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்