லைகா படத்திற்குப் பின் அஜித் 'உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணம்'! - சுரேஷ் சந்திரா டுவீட்

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (16:08 IST)
'அஜித்62' படத்திற்குப் பின்,  நடிகர் அஜித்குமார் உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக  சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில், வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்துள்ளது.

இப்படத்திற்கு இடையில்,  நடிகர் அஜித்குமார், மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினருடன் இந்தியாவிலுள்ள  வட மா நிலங்கள் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்தார்.

துணிவு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்குப் பிறகு, அஜித்62 படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால், விக்னேஷ் சிவன் அஜித்62 படத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில், இப்படத்தை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  அஜித்62 படத்திற்கு பின் அஜித் உலக பைக் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டரில் பக்கத்தில், ‘’லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது’’ என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்