17 ஆண்டுகளுக்கு பின் பிரசன்னாவுடன் நடித்த பிரபல நடிகை!

செவ்வாய், 14 ஜூன் 2022 (19:37 IST)
17 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகை ஒருவர் பிரசன்னாவுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா, லைலா நடித்த திரைப்படம் ’கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் நாயகி லைலாவின் சகோதரியாக ரெஜினா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது ’பிங்கர் டிப்’ என்ற வெப்தொடரின் இரண்டாவது சீசனில் பிரசன்னாவுடன் ரெஜினா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ’கண்ட நாள் முதல்’ படத்தில் நடிக்கும்போது நான் குழந்தை போல் இருந்தேன் என்றும் அப்போதெல்லாம் நான் சினிமாவுக்கு புதிது என்றும் அவர் கூறினார் 
 
இதற்கு பதில் கூறிய பிரசன்னா ’கண்ட நாள் முதல்’ படத்தில் நடிக்கும் போது எனக்கும் 20 வயதுதான் என்று கூறியது நகைச்சுவையாக இருந்தது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்