விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.
இந்த படத்திற்கு விருமன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள கியூட்டான சில புகைப்படங்களை கண்டு கோலிவுட் ரசிகர் உருகி வழிந்து flirt செய்து வருகின்றனர்.