துறவியாக மாறிய நடிகை.. கோவில் கோவிலாக செல்ல முடிவு..!

Mahendran
புதன், 4 டிசம்பர் 2024 (16:20 IST)
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான தமிழ் நடிகை துறவியாகி இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கோவில் கோவிலாக சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை புவனேஸ்வரி. அதன்பின் இவர் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களில் நடித்த நிலையில், அவர் மீது திடீரென விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சட்ட போராட்டம் நடத்தி தன்னை நிரபராதி என்று நிரூபித்து வெளியே வந்தார்.

இதனை அடுத்து அவர் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது திடீரென துறவி ஆகி உள்ளதாக அறிவித்துள்ளார். என் மனம் ஆன்மீக வழியில் சென்று விட்டது என்றும் அதன்படி ஆன்மீக பயணம் செய்ய தொடங்கிவிட்டேன் என்றும் என் வாழ்நாளை இறை பணிக்காக அர்ப்பணிக்க முடிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு சென்னையில் சில வீடுகள் சொந்தமாக இருக்கும் நிலையில், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் தன்னுடைய செலவு போக மீத பணத்தை ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் செல்ல முடிவு செய்திருப்பதாகவும், கோயில் மட்டுமின்றி மசூதிகள், தேவாலயங்களுக்கும் செல்ல இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்