மணிரத்னம் உதவியாளரான ‘லப்பர் பந்து’ நடிகை.. கவின் படத்தை இயக்குகிறாரா?

Siva

திங்கள், 27 ஜனவரி 2025 (14:17 IST)
‘லப்பர் பந்து’  திரைப்படத்தில்  நடித்த நடிகை தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைப்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் நிலையில் விரைவில் அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் கவின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்த ‘லப்பர் பந்து’  படத்தில் நாயகி சஞ்சனா என்பவர் நடித்திருந்த நிலையில், இவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். தற்போது உருவாகி வரும் ’தக்லைப்’ படத்தில் அவர் உதவி இயக்குனராக நடிப்பதோடு ஒரு முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சனா இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும், அவரது முதல் படத்தில் கவின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சஞ்சனா கடந்த இரண்டு ஆண்டுகளாக கவினை  சந்தித்து தன்னுடைய கதையை கூறி வருவதாகவும், தற்போது தான் அது நிறைவேற போவதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும், கவின் ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இது கவின் நடிக்கும் ஒன்பதாவது படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்