பிரபல நட்சத்திர ஓட்டலின் மீது நடிகை ஸ்ரேயா சரண் புகார்

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (15:27 IST)
பிரபல நட்சத்திர ஓட்டலின் மீது நடிகை ஸ்ரேயா சரண் புகாரளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர், எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர், ஜெயம் ரவி நடித்த மழை, ரஜினியுடன் சிவாஜி,  அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அவர் குழந்தை பெற்றெடுத்த பின், மீண்டும் நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில்  இவர் நடிப்பில், வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்குச் சென்ற ஸ்ரேயா, அங்குள்ள பெரிய கூண்டிற்குள் ஏராளமான பறவைகள் அடைத்து வைத்திருப்பதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்தார். பின்னர், ஒரு வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், 'பறவை ஆர்வலராக இருந்தால், அதைச் சுதந்திரமாக வெளியே விட வேண்டும். இத்தனை பறவைகளை கூண்டிற்குள் அடைத்து வைப்பது சட்டப்பூர்வமானதா?'' என்று என்று பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்