சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா நடிகை சமந்தா?

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (15:39 IST)
நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் என்ற நோய் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் தென்கொரியா சென்று சிகிச்சைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சமந்தா நடித்த யசோதா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 
 
மேலும் அவர் தி பேமிலிமேன் 2 உள்பட ஒரு சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்த நிலையில் அந்த படங்களில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது 
 
நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏற்கனவே அவர் சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார்.
 
இந்த நிலையில் அடுத்ததாக அவர் தென்கொரியா செல்ல இருப்பதாகவும் அங்கு இந்த நோய்க்கு சிகிச்சை பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமந்தா ஒரு சில ஆண்டுகளில் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்