தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 80 கள் மற்றும் 90களில் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரேவதி. அதன் பின்னர் குணச்சித்திர வேடத்த்துக்கு தன்னை மாற்றிக்கொண்டு அதிலும் கலக்கினார். ஆனால் அவர் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார் என்பது பெருவாரியான ரசிகர்கள் அறியாதது.
இந்நிலையில் ரேவதி தன்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றி பேசியுள்ளார். அதில் “நான் என் சினிமா வாழ்க்கையில் நடித்த அனைத்துப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை. ஒரு கட்டத்தில் எனக்குப் பிடிக்காத படங்களில் கூட விருப்பமில்லாமல் நடித்திருக்கிறேன். சினிமாவை நான் மிகவும் விரும்புகிறேன். அதனைக் காசு சம்பாதிக்கும் ஒரு வழியாக மட்டும் நான் பார்க்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.