பிரபலங்களின் மறைவில் ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது… பிரித்விராஜ் கருத்து!

vinoth

வியாழன், 20 மார்ச் 2025 (07:45 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ள தமிழிலும் ‘மொழி’ மற்றும் ‘வெள்ளித்திரை’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிருத்விராஜ், இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க அது இம்மாத இறுதியில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் பிருத்விராஜ் தெரிவித்துள்ள ஒரு கருத்து கவனம் பெற்றுள்ளது. அவர் “என்னைப் பொறுத்தவரை பிரபலங்களின் மறைவின் போது ரசிகர்களை அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் என்னுடைய அம்மாவின் இறப்பின்போது கூடிய ரசிகர்கள் மரியாதை செலுத்த வந்திருந்த மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரைப் பார்த்து கைகாட்டி, விசிலடித்தனர். அப்போது என் மனநிலை என்னவாக இருக்கும் என அவர்கள் நினைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்