அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த இன்னொரு தமிழ் ஹீரோ!

vinoth
செவ்வாய், 1 அக்டோபர் 2024 (08:56 IST)
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டதை விட முன்பே மே மாதம் தொடங்கியது. அதன் பின்னர் கடந்த சில வாரங்களாக மீண்டும் நடந்த அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நாளுக்கு நாள் பிரபல நடிகர்கள் இணைந்து வருகிறார்கள். ஏற்கனவே சுனில் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் இணைந்த நிலையில் தற்போது நடிகர் பிரசன்னாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்