மம்மூட்டி & கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

vinoth

சனி, 7 செப்டம்பர் 2024 (13:18 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடிக்கும் ஒரு படத்தை அவர்  இயக்கி வருகிறார். இந்த படத்தை மம்மூட்டியே தன்னுடைய ‘மம்மூட்டி கம்பெனி’ மூலமாக தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு “டோம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதோடு மம்மூட்டி இரவுடையோடு வீட்டில் நிற்பது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த படம் ஒரு ஆண் பெண் உறவைப் பற்றி பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்