நடிகை மீனா கதாநாயகியாக அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே குழந்தை நட்சத்திரமாகவும் சில படங்களில் நடித்திருக்கும் அவர் அதையும் சேர்த்தால் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் மீனா. எல்லா முன்னணி நடிகர்களுடம் நடித்த அவர் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தன் சினிமா வாழ்க்கையில் படையப்பா மற்றும் தேவர் மகன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை இழந்தது பற்றி வருந்துவதாகக் கூறியுள்ளார்.