உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்ட மலையாள நடிகை லீனா மரியா பாலின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், கடந்த நவம்பர் 3ம் தேதி பிரபல தாதா ரவி புஜாரி என்பவர் கூறியதாக தெரிவித்து, ரூ. 25 கோடி தருமாறு தனக்கு தொடர்ந்து மிரட்டல் போன்கள் வந்தன. பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். இதுதொடர்பாக போலீசுக்கு புகார் அளித்தேன்.
இந்நிலையில் டிசம்பர் 15ம் தேதி கொச்சி, பணம்பில்லி நகர் பகுதியிலுள்ள எனது பியூட்டி பார்லரில் மாலை 3 மணியளிவில் ஹெல்மெட் அணிந்த வந்த மர்மநபர்கள் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு பைக்கில் வேகமாக தப்பிச் சென்றனர். அந்த சமயத்தில் நான் அங்கு இல்லை.
எனவே எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்க வேண்டும். அதற்கான செலவை தான் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி ஆர் ராமசந்திர மேனன், என் அனில் குமார் ஆகியோரி அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு எதிராக மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்களை மனுதாரர் நியமித்து கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டதை மனுதாரரும் ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே போலீஸ் பாதுகாப்பு தர முடியாது என்றனர்.