நீங்களா அதுக்கு காசு குடுத்தீங்க.. அவமானமா இருக்கு! – பதிலடி கொடுத்த குஷ்பூ!

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (17:28 IST)
ட்விட்டரில் குஷ்பூவின் புகைப்படத்திற்கு ஃபாலோவர் இட்ட கமெண்டுக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளார் குஷ்பூ.

பிரபல நடிகயான குஷ்பூ கடந்த ஆண்டில் தமிழக பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். கட்சி பணிகளுக்கு இடையே திரைப்படங்களிலும் நடித்து வரும் குஷ்பூ சமீபமாக உடலை வெகுவாக குறைத்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கோல்டன் நிற உடையில் குஷ்பூ ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் கமெண்ட் செய்த ஒருவர் “அழகாகதான் இருக்கிறீர்கள். பின்னர் ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி, தோல் திருத்தம் போன்றவற்றை செய்ய வேண்டும். வயதானாலும் உங்கள் இயற்கை அழகுடன் இருக்கலாமே” என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த குஷ்பூ “நீங்கள்தான் அதுக்கு காசு குடுத்தீங்களா மை டியர்? மற்றவர்களை துன்புறுத்தி அடையும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குது என்று தெரியவில்லை. உங்களை நினைச்சா அவமானமா இருக்கு” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்