எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகுகிறாரா கனிகா?

vinoth

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (10:31 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல் ‘எதிர்நீச்சல்’. அந்த தொடரில் நடித்த மாரிமுத்துவின் மிடுக்கான நடிப்பால் சூப்பர் ஹிட்டானது. ஆனால் அவரது திடீர் மறைவால் அவருக்குப் பதில் நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது சீசன் ‘எதிர்நீச்சல் 2’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் முதல் சீசன் அளவுக்கு வரவேற்பைப் பெறாத எதிர்நீச்சல் 2 தற்போது மெல்ல மெல்ல நல்ல டி ஆர் பி-ஐப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த கனிகா தற்போது அந்த சீரியலில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலில் தற்போது அவர் கதாபாத்திரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவது போல காட்சிகள் நகர்ந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்