காதலருடன் திருப்பதி கோவிலில் நடிகை ஜான்விகபூர் சாமி தரிசனம்

திங்கள், 3 ஏப்ரல் 2023 (17:13 IST)
பிரபல பாலிவுட் நடிகை  ஜான்வி கபூர் இன்று தன் காதலருடன் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்தி சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் தடக் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து, பல  நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் இன்று காலை ஜான்விகபூர் சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, அவருடன் அவரது காதலர் ஷிகார் பஹாரியாவும், அவரது தங்கை குஷி கபூரும் வந்திருந்தார். அவர்கள் இருவரும்,தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற உடைகளான பாவாடை, தாவணியில் வந்திருந்தனர்.

ஜான்வி கபூரின் காதலவர் ஷிகார் பஹாரியாவும், மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்