பிரேக் அப் ஆன காதலர்களுக்கு கவுன்சிலிங்: ரூ.33 கோடி ஒதுக்கிய அரசு..!

வெள்ளி, 24 மார்ச் 2023 (19:32 IST)
பிரேக்கப் ஆன காதலர்களுக்கு கவுன்சிலிங் சொல்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழுவிற்கு ரூ.33 கோடி செலவு செய்திருப்பதாகவும் நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. காதலிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காதல் தோல்வி அடைநதால் மனம் உடைந்து விடுகின்றனர் என்பதும் இதனால் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் தோல்வி அடைந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்காக லவ் பெட்டர் என்ற பிரச்சாரக் குழுவை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது.
 
 இதற்காக அந்நாட்டு அரசு 33 கோடி ஒதுக்கி உள்ளது. காதல்  தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டு வர ஆலோசனை வழங்குவது, இளைஞர்களை மனம் திறந்து பேச வைப்பது ஆகியவைதான் இந்த பிரச்சார குழுவின் வேலை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நியூஸ்லாந்து அரசின் இந்த முயற்சிக்கு அந்நாட்டு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்