உடன்பிறந்த சகோதரரை 20 துண்டுகளாக வெட்டிக் கொன்ற தங்கை

செவ்வாய், 21 மார்ச் 2023 (17:54 IST)
பெங்களூரில் 9 ஆண்டுகளுக்கு முன் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது தங்கையே காதலுடன் சேர்ந்து அவரைக் கொன்றது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாகியஸ்ரீயின் செயலை அவரது சகோதரன் லிங்கராஜ்(22)  கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, பாக்கியஸ்ரீ தன் கள்ளக்காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து, அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டனர்.

அதன்படி, ஒரு நாள் பாக்யஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து, லிங்கராஜை அடிதிதுக் கொன்றனர்.  இது தெரியக்கூடாது என்பதற்காக, அவரது உடலை சுமார் 20 துண்டுகளாக வெட்டி, அதை 3 பிளாஸ்டிக் பையில் போட்டு, அதனை ஜிகினி அருகிலுள்ள மஞ்சனஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து வந்த நிலையில், 8ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கொலையைச் செய்தது லிங்கராஜின் உடன் பிறந்த சகோதரி என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பாக்கியஸ்ரீ மற்றும் அவரது காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்