சினிமா வாய்ப்புக்காக கிளாமர் போட்டோக்களை கொஞ்சம் கூட யோசிக்காமல் தட்டிவிட்டிருக்கிறார் ராஜாராணி தான்யா பாலகிருஷ்ணன்.
குறும்படங்களில் நடித்து தன்னை தயார் செய்துகொண்ட தான்யா பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பெயர்போன நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘7ஆம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அதனையடுத்து ‘காதலி சொதப்புவது எப்படி’ ‘ராஜா ராணி’ போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவருக்கு தெலுங்கு சினிமாவிலும் லக் அடித்தது. அதனை தொடர்ந்து தற்போது கன்னடம் மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை தான்யா.
இந்நிலையில் தற்போது படங்களை தொடர்ந்து ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரியலில் நடித்துவரும் தான்யா சமீபத்தில் தனது தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அப்போது அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ள அந்தப்புகைப்படம் இணையதளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.