ஆன்மீகத்தில் இறங்கிய பாய்ஸ் பட நடிகை புவனேஸ்வரி.. இதுதான் காரணமாம்!

vinoth
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:45 IST)
பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.  ஆந்திராவைச் சேர்ந்த இவர் தமிழில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக இவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அந்த வழக்கில் இருந்து நிரபராதி என நிரூபித்து விடுதலை ஆன இவர் தற்போது காசிக்கு சென்று சித்தி பெற்று ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “சினிமாவில் எனக்குக் கவர்ச்சி வேடங்களாக வந்தபோதும் வாழ்க்கை சீராக சென்றது. திடீரென ஒரு எதிர்பாராத சிக்கலில் சிக்கினேன். நான் நிரபராதி என அறிவிக்கப்பட்டாலும் சமூகம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை,

அதனால்தான் இப்போது ஆன்மிகப் பணிகளில் இறங்கிவிட்டேன். எனக்கு சொந்தமான வீடுகளில் இருந்து வரும் வாடகை மூலமாக ஆன்மீகப் பணிகளுக்கு செலவிடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்