தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர் நித்யா மேனன். கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.
அதில் “தேசிய விருது விழா நாளுக்கு முன்பாக நான் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது நான் மாட்டு சாணத்தை அள்ளும் காட்சியில் நடித்தேன். அடுத்த நாள் நான் தேசிய விருதைப் பெறும் போது என் விரல் நகங்களுக்கிடையில் மாட்டு சாணம் இருந்தது என்பது வித்தியாசமான உணர்வு. வாழ்க்கை அழகானது” எனக் கூறியுள்ளார்.