இப்படி போட்டோ போடணும்னா தனி தைரியம் வேணும் - இருந்தாலும் அழகா இருக்கீங்க!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (12:06 IST)
சினிமா நடிகைகள் என்றாலே எப்போதும் பளீச்சுன்னு இருப்பாங்க...தூங்கும்போது கூட மேக்கப் இல்லாமல் அவர்களை பார்க்கவே முடியாது. மேக்கப் போடாமல் வெளியில் சென்றால் தன் உண்மையான முகத்தை ரசிகரகள் ட்ரோல் செய்து விடுவார்கள் என்று அஞ்சியே எங்கு சென்றாலும் முகம் முழுக்க பவுடரை அப்பிக்கொண்டு செல்லும் நடிகைகள் தான் இங்கு ஏராளம் இருக்கின்றனர். 
 
ஆனால், த்ரிஷா , காஜல் அஃகர்வால் போன்ற உச்ச நடிகைகள் மற்ற நடிகைகளை விட சற்று மாறுபட்டு சிம்பிளான உடை அணிந்து கொண்டு வித் அவுட் மேக்கப்பில் போட்டோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் அப்லாஸ் வாங்கி சில தினங்களுக்கு முன்னர் ட்ரெண்ட் ஆகினர். 
 
அந்தவகையில் தற்போது நடிகை அஞ்சலி துளி கூட மேக்கப் போடாமல் நைட்டி அணிந்துகொண்டு பக்கத்துக்கு வீட்டு தேவதை போன்று சிம்பிளாக இருப்பதை புகைப்படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனைகளுக்கு உள்ளாகியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் இப்படியெல்லாம் போட்டோ போடுறதுக்கு ஒரு தைரியம் வேணும்...அழகா இருக்கீங்க. இருந்தாலும் youcam perfect app ல் எடுத்து முகத்தை மெருகேற்றி இருக்கீங்க... என கண்டறிந்து கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்