தமிழகம் மட்டுமில்லை மற்ற மாநிலத்தில் தர்பார் வசூல் இத்தனை கோடியா!

வியாழன், 16 ஜனவரி 2020 (17:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் மாபெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது.   
 
தற்போது வரை தர்பார் படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழகத்தில் நேற்று மட்டுமே ரூ 10 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 16 கோடி, கர்நாடகாவில் ரூ 16 கோடி, கேரளாவில் ரூ 7.5 கோடி முறையே வசூல் செய்துள்ளது.
 
மேலும் வட இந்தியாவில் தர்பார் ரூ 5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் கணித்துள்ளது. தர்பார் தொடர் விடுமுறை நாளில் வெளியானதால் கலெக்ஷனில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்