விளையாட்டு வீரர்களைப் போல சினிமா நடிகர்களுக்கும் போதை பொருள் சோதனை மேற்கொள்ள வேண்டும் ! மத்திய அமைச்சருக்கு கடிதம்!

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (12:26 IST)
சுஷாந்தின் மர்மமான மரணம் பல வழிகளில் விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில் இப்போது அது குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தின் திடீரென கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவரது தந்தை நடிகை ரியா மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ரியாவின் வாட்ஸ் ஆப் உரையாடல்களை ஆய்வு செய்து அதில் அவர் போதை பொருட்களை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த வழக்கை போதைப் பொருள் சம்மந்தப்பட்ட கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங்க், பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘சினிமா நடிகர்கள் இளைஞர்கள் மேல் அதிக தாக்கத்தை செலுத்துகின்றனர். பாலிவுட் படங்களில் அதிகமான போதை மருந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. இது இளைஞர்களை தவறான் பாதையில் செல்ல வழிவகுக்கும். அதனால் சினிமா நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு செய்வது போல போதை மருந்து சோதனை செய்யப்படவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்