இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் ரியா தரப்பு இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில ஊடகங்களிலும் பாலிவுட்டிலும் ரியாதான் குற்றவாளி போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி ரியாவுக்கு ஆதரவாக ‘எனக்கு தனிப்பட்ட முறையில் சுஷாந்த் மற்றும் ரியா இருவரையும் தெரியாது. ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாதவரை, குற்றமசாட்டுவது தவறு என்று தெரியும். இதைப் புரிந்துகொள்ள மனிதம் இருந்தால் போதும். இறந்தவரின் கண்ணியத்துக்காக உங்கள் நாட்டின் சட்டத்தை நம்புங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.