மீண்டும் தங்கம் விலை சரிவு; இன்னும் கொஞ்சம் சரியாதா? – மக்கள் எதிர்பார்ப்பு

புதன், 2 செப்டம்பர் 2020 (10:56 IST)
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை கண்டு வரும் தங்கம் மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பலர் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் உச்சமாக 40 ஆயிரத்தை தாண்டிய தங்கம் தற்போது ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வருகிறது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.48 குறைந்து ரூ.4,916க்கு விற்பனையாகி வருகிறது. இது கணிசமான அளவு விலை குறைவுதான் என்றாலும் முன்னதாக விலை அதிகரித்ததை விட குறைவு என்பதால் மேலும் விலை குறையுமா என்றும் மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்