தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில், இவருடன் இணைந்து, ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ்,எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். சிம்புவும் கேமியோ ரோல் பண்ணியுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்க, தில் ராஜு தயாரித்து வருகிறார். அஜித்தின் துணிவு படத்துடன், விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், வாரிசு படத்தின் 2 பாடல்கள் ( ரஞ்சிதமே, தீ தளபதி) ரிலீஸாகி புரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது.