ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..!

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (15:01 IST)
சமீபகாலமாக தனது அதிரடியான பாலியல் புகார்களால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது தமிழ் திரையுலகையும் ஆட்டம் காண வைத்து வருகிறார்  தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்களை தெலுங்கு திரையுலகமும் ஆந்திர அரசும் கூட புறந்தள்ளிவிட்டன.
இதை தொடர்ந்து தமிழ்சினிமா பக்கம் பார்வையை திருப்பிய ஸ்ரீ ரெட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளாதுடன் ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உள்ளிட்ட சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டை வீசினார். 
 
இவரின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக நடிகரும், தயாரிப்பாளருமான வாராகி, ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.  இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை வைத்து படம் தயாரிக்கபோவதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதுவே ஒரு தவறான முன்  உதாரணம் தான். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார்.
 
இதனை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான வாராகி, ராகவா லாரன்ஸுக்கு தமிழ் திரையுலகம் சார்பாக வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் கடந்த நான்கு மாதங்களாக பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது புகார் கூறிய இவர், தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறி, ஒரு திட்டத்துடன்  தனது மிரட்டலை தொடர்ந்து வருகிறார் ஸ்ரீரெட்டி.
 
தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டிக்கு திறமை இருக்குமேயானால், தனது படத்தில் வாய்ப்பு தர தயார் என சமீபத்தில் கூறியிருந்தார். ஸ்ரெட்டிக்கும் அதுதான் நோக்கம் என்றால் அந்த வாய்ப்பை நேர்மையாக ஏற்று இருக்கவேண்டும்.
 
நீங்கள் இந்த சமூகத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துகொண்டிருக்கும்போது, ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பது தவறான ஒரு நடைமுறையை உருவாக்கிவிடும்.. அதன்பின் ஸ்ரீ ரெட்டி போன்ற சமூக விரோத கும்பல்கள் பாரம்பரியமான தமிழ் சினிமாவில் உள்ளே நுழைய ஊக்கம் கொடுப்பது போலாகிவிடும். ஆகவே இதுபோன்ற நபர்களை  தயவுசெய்து புறக்கணியுங்கள்.. 
 
இதை வாராகி என்கிற தனிப்பட்ட நபரின் கோரிக்கையாக அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே உங்களிடம் வைக்கும் கோரிக்கையாக இதை நீங்கள்  பார்க்கவேண்டும்... எங்கள் கோரிக்கையை நிச்சயம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம்". என இவ்வாறு கூறியுள்ளார் வாராகி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்