சிம்புவின் கார் மோதி ஒருவர் பலி: டிரைவர் கைது!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (17:42 IST)
சிம்புவின் கார் மோதி ஒருவர் பலியானதை அடுத்து சிம்புவின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வயதான ஒரு முதியவர் மீது கார் ஒன்று கடந்த வெள்ளியன்று மோதியது. இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்
 
இதனை அடுத்து சிம்புவின் கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த விபத்தின் போது காரில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் இருந்ததாகவும் ஆனால் இந்த விபத்துக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்