திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரபலம்… என்ன காரணம் தெரியுமா?

புதன், 23 மார்ச் 2022 (13:05 IST)
பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி உடல்நிலை காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ்லில் கலந்து கொண்டு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் சுரேஷ் சக்ரவர்த்தி. அதையடுத்து இப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக அவர் கலந்துகொண்டுள்ளார். இப்போதும் தாமரைக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில் அவர் இப்போது திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சொல்லப்படுகுறது. எவிக்‌ஷனில் இல்லாமல் உடல்நிலை பாதிப்புக் காரணமாக அவர் வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்