விஜய்யை சிறந்த நடிகர் என சொல்ல முடியாது… மலையாள நடிகர் தடாலடி!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:39 IST)
மலையாள நடிகரான சித்திக் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் நடிகரான விஜய்யை சிறந்த நடிகர் என சொல்ல முடியாது என பேசியுள்ளார்.

மலையாளத்தில் மாஸ் படங்களுக்கு நிகராக எதார்த்தமான படங்களும் சம அளவில் வெளியாகி வருகின்றன. அதிலும் அந்த மொழியின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரே நடித்து வருகின்றனர். ஆனால் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மாஸ் படங்களில் மட்டுமே நடிப்பார்கள்.

இதுபற்றி பேசியுள்ள மலையாள நடிகரான சித்திக் ‘மலையாள சினிமா அதிர்ஷ்டம் செய்தது. ஏனென்றால் இங்குதான் மம்மூட்டி மோகன்லால் போன்ற சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள். மற்ற திரையுலகில் இதுபோன்ற சிறந்த நடிகர்கள் இல்லை. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விஜய்யை சிறந்த நடிகர் என்று சொல்லமுடியாது. தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை வேண்டுமானால் சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாமே தவிர விஜய்யை சிறந்த நடிகர் என்று சொல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்