நடிகர் சந்தானம் படத்தின் முக்கிய அப்டேட்... லிட்டில் மேஸ்ட்ரோவின் குரலில் சூப்பர் பாடல் ரெடி !

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (17:56 IST)
நகைச்சுவை நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக  நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் சந்தானம். இவர் இனிமேல் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.

இவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர்,  இவர் பல புதுப்படங்களில் கமிட் ஆனார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படம் ஹிட்டானாது. இதையடுத்து அவரது நடிப்பில்  சர்வர் சுந்தரம் படம்  வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படமும் ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது. இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது டிக்கிலோனா படத்தின் அனைத்துப் பாடல்களும் நாளை ரிலீசாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இதில் லிட்டில் மேஸ்ட்ரோ யுவனின் குரலில் ஒரு பாடல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது… குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்